16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்

காஞ்சிபுரத்தில் 16 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை தேநீர் கடையில் பணிபுரியும் கேரளத்தை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் வீட்டில் புகுந்து வாயை அடைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமி தள்ளிவிட்டு கூச்சலிட்டதையடுத்து தாய் மற்றும் அண்ணன் விழித்துள்ளனர். பலாத்காரத்தில் ஈடுபட முயன்றவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது மர்ம நபர்கள் தாய் மற்றும் அண்ணனை தள்ளிவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய கேரள இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version