கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவின் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்..  சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக தற்போது  பிரயண்ட் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் 4 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. கண்ணைக் கவரும் அலங்கார வளைவுகள், புதிய மலர்ப் படுகைகள், கண்ணாடி மாளிகை உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறுவதால் மலர்கள் குறைவாக உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.  விரைவில் பணிகள் முடிவடைந்து, புதுப் பொலிவுடன் பூங்காவை காண ஆர்வமாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Exit mobile version