கொடைக்கானலில் குறிஞ்சி மலர் பூக்கும் பருவக்காலம் குறித்து விழிப்புணர்வு

கொடைக்கானலில் கோடை குறிஞ்சி மலர் பூக்கும் பருவக்காலத்தை விளக்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் கடந்த 2018 ஆம் ஆண்டு பூத்து குலுங்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி அரசு விழாவாக குறிஞ்சி விழா கொண்டாடப்பட்டது. இந்த நாளை, கோடை குறிஞ்சி நாளாக சுற்றுலாத்துறையுடன் இணைந்து கொண்டாடி, குறிஞ்சி பூக்கும் பருவ காலத்தை விளக்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை, சுற்றுலாத் துறையில் கலைமாமணி விருது பெற்ற வி.கே.டி.பாலன் வெளியிட்டார்.

சுற்றுலாத்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், சுற்றுலாத்தளங்களில் வாகன ஓட்டுநர்களின் பங்கு சிறப்பானது எனவும் பேசினார். தொடர்ந்து பேரூந்து நிலையத்தில் உள்ள வாடகை கார்களில் குறிஞ்சி மலர் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

Exit mobile version