உணவகங்களில் விலை பட்டியலின்றி உணவு பொருள் விற்பனை கூடாது: திண்டுக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

கொடைக்கானலில் உணவு விலைப்பட்டியலை வைக்காமல் இருக்கும் உணவகங்கள், அதிக கட்டணங்கள் வசூல் செய்யும் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொடைக்கானலில், வரும் 30, 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் கோடைவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வினய் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, காவல் துறை, வருவாய்த்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

கோடை விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், சுற்றுலா பயணிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர் வினய், விலைப்பட்டியல் இன்றி உணவு பொருட்கள் விற்பனை செய்யும் உணவகங்கள் மீதும், அதிக கட்டணம் வசூல் செய்யும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Exit mobile version