புதிய தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு – தமிழகத்தில் இன்று முதல் அமல்!

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, உணவகங்கள், தேநீர் கடைகள், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும், பார்சல் சேவை இரவு 10 மணி வரை நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. சினிமா படப்பிடிப்பின் போது 100 நபர்களுக்கு மிகாமல் பணியில் ஈடுபடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசுத்துறைச் சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 10 – 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் சென்று சந்தேகங்களை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version