தேதி போட்டாங்களா – பிடிஆரை பிரித்தெடுக்கும் நெட்டிசன்கள்

`விடியல் கொடுப்போம்’ என்று சூரியனை குத்தகைக்கு எடுத்த கணக்காக கூவிக்கொண்டிருந்த கூட்டம் இன்று இருளை வியாபித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. என முழங்கியவர்கள் முடங்கி கிடக்கிறார்கள்.

பொய்களை எழுத்தாக வடித்து, புத்தகமாக்கி `தேர்தல் அறிக்கை’ என்ற பெயரில் வெளியிட்டது விடியல் குரூப். நாங்கள் வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்போம் என சூளுரைத்தவர்கள், இன்று சிடுசிடுக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கேட்டதற்கு, `விலையை குறைப்போம்னு சொன்னோம்.. எப்போனு தேதி போட்டோமா?’ என தனது கட்சி புத்தியை காட்டியிருக்கிறார் பிடிஆர். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற எம்ஜிஆர் பாடல் பின்னணியில் ஒலிக்க இடத்தை காலி செய்தார் பழனிவேல் தியாகராஜன்.

பேட்டியை பார்த்ததும், உடனே களத்தில் குதித்த நெட்டிசன்கள், `தேதி போட்ருக்காங்களா!?’ என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு நிதியமைச்சரை பந்தாடி வருகின்றனர்.

 

Exit mobile version