வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இந்நிலையில் சின்னத்தம்பி யானை பத்திரமாக பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக கூறினார்.
சின்னத்தம்பி யானையை வனத்துறை துன்புறுத்தவில்லை என்று கூறிய அவர் குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்திற்குப்பிறகு, அனுமதியில்லாமல் மலையேற்றம் செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.