கஜா புயல் பாதித்த பகுதிகள் -7 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று முதல் 3 நாட்கள்ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 7 பேர் கொண்ட மத்தியகுழுவினர் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்துறை அதிகாரி ரிச்சர்ட் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இவர்களுடன் தமிழகத்தில் பணியாற்றும் மத்திய அதிகாரிகள் 2 பேர் இணையவுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழுவினர் சந்தித்துப் பேசுகின்றனர். முன்னதாக 9 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய குழுவினர், அங்கிருந்து கார் மூலம் புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்கின்றனர்.

3 நாட்கள் ஆய்வுக்குப்பிறகு 27-ம் தேதி மத்திய குழுவினர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

 

Exit mobile version