தாராபுரத்தில் மருத்துவர் வீட்டில் கொளையடித்த கொள்ளையனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கடந்த 3 நாட்களுக்கு முன்பாக மருத்துவர் காயத்ரி வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனையடுத்து காயத்ரி அளித்த புகாரின்பேரில் கொள்ளையன் குறித்து விசாரணை நடந்து வந்தது. மர்ம நபர் ஒருவர் தாராபுரம் பகுதிகளில் சில நகைகளை விற்க முயன்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் நோட்டமிட்டு அந்தக் கொள்ளையனை மடக்கி பிடித்தனர். விசாரணையில் மருத்துவர் காயத்ரி வீட்டில் கொள்ளையடித்தது இவர்தான் எனத் தெரிய வந்தது. அவரிடமிருந்து 41 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.