நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மானூரில் வேளாண்மை துறை சார்பில் பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தப் பண்ணை திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கிராமங்களில் தேர்வு செய்து இரண்டரை ஏக்கர் உள்ள விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மானியத்துடன் கூடிய கால்நடை வளர்ப்புக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து மானூரை அடுத்த கீழ பிள்ளையார் குளத்தில் விவசாயிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளை இணை இயக்குனர் பாலசுப்ரமணியன் வழங்கினார். வறட்சி காலங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஈடுசெய்யும் வகையில் இத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.