திருவையாறு மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் கஜா புயல் காரணமாக வேரோடு சாய்ந்ததால் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு கொள்ளிடம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இதில், பல ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் உருக்குலைந்தது. வளப்பகுடி, நடுபடுகை, உத்தமநல்லூர், ஈச்சங்குடி, கல்யானபுரம், கண்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை, பூவம், மொந்தம் உள்ளிட்ட வாழை ரகங்கள் கஜா புயலால் பாதிப்பு அடைந்துள்ளது.
பல லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு விவசாயம் செய்திருந்த விவசாயிகள் தற்போது புயலால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கன்றனர். பாதிப்படைந்த விவசாயிகள் இதற்கு உடனடியாக உரிய நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.