காவிரி பற்றி பேச திமுகவிற்கு தார்மீக உரிமை கிடையாது – அமைச்சர் காமராஜ்

மேகதாதுவில் தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியில்லாமல் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம், துண்டக் கட்டளை உள்ளிட்ட கிராமங்களில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் திமுகவினர் தொடர்ந்த வழக்கை, அவர்களே திரும்ப பெற்றுக் கொண்டனர் என்றும், எனவே காவிரி உரிமை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் கூறினார்.

 

Exit mobile version