அதிமுக கூட்டணியை ஸ்டாலின் விமர்சிக்கிறார், ஆனால் இது வாக்கு வங்கி உள்ள கூட்டணி என்றும் அரை மற்றும் ஒரு சதவீத வாக்கு வங்கியை கொண்ட கூட்டணி திமுக கூட்டணி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில், அரக்கோணம் மக்களவை பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலினுக்கு எதுவும் கிடைக்காததால் தன்னையும், கூட்டணி கட்சிகளையும் விமர்சிப்பதாக கூறினார்.
ஸ்டாலினை முதலமைச்சராக விடமாட்டேன் என்று கூறிய வைகோவையே கூட்டணியில் வைத்திருக்கும் திமுகவுக்கு, அதிமுக கூட்டணியை விமர்சிக்க என்ன தகுதியுள்ளது என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார். வேலூர் மாவட்டம் முத்துக்கடை பகுதியில், அரக்கோணம் மக்களவை பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், குழந்தைகள் கல்வி பயில் அனைத்து உதவிகளையும் அதிமுக அரசு செய்து வருவதாக குறிப்பிட்டார்