பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், புல்வாமாவில் 40 வீரர்களை பலி வாங்கிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு, அரசுடன் இணைந்து கண்டனம் தெரிவித்த கட்சிகளில் காங்கிரஸும் ஒன்று என்றும், ஆனால், பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பிறகு அக்கட்சி கலக்கமடைந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பாலகோட் தாக்குதல் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இன்னும் போலித்தனமாக இருந்ததாக கூறியுள்ள அவர், முதல் இரண்டு நாட்களுக்கு இந்திய விமானப் படையை பெயரளவிற்கு பாராட்டியதாகவும், விமானப்படையின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.