திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  இதனையொட்டி  கடந்த 11ஆம் தேதி  சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது.  கும்பாபிஷேகத்தின் முக்கிய நாளான இன்று.  கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.   கும்பாபிஷேகத்தையொட்டி குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலும், கோபுர கலசத்தின் மீது நடைபெறும் பூஜைகளை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் .
Exit mobile version