திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை எதிரொலியாக, திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு வளாகத்தில் உள்ள 31 அறைகளில், 18 மணி நேர காத்திருப்புக்கு பின்னரே, ஸ்ரீ வெங்கடாசலபதியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version