சரஸ்வதி கோலத்தில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளில் சரஸ்வதி கோலத்தில் எழுந்தருளி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஹம்ச வாகன சேவைக்காக சரஸ்வதி கோலத்தில் கோயிலில் இருந்து புறப்பட்ட தாயார் வாகன மண்டபத்தை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து கைகளில் வீணையை ஏந்தியவாறு ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வலம் வந்தார். பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே நடைபெற்ற பத்மாவதி தாயாரின் ஹம்ச வாகன திருவீதி உலாவை மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

Exit mobile version