3 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்

செஞ்சி அருகே, டியூஷன் படிக்க வந்த 3 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி, பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். தனியாக டியூஷனும் அவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், தன்னிடம் படிக்கும் 8 வயது சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர், பூபதி மீது போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், பூபதி, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version