கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முதலமைச்சர் கோரிக்கை

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்ததில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல்.மக்காச்சோளம், கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன.அதற்கான காப்பீடு இன்னும் செய்யப்படவில்லை.இந்த மாதம் நவம்பர் 30ஆம் தேதியோடு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசம் நிறைவடைகிற நிலையில் டிசம்பர் 31வரை நீட்டிக்குமாறு முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.புயலால் எந்த நேரமும் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலையில் பயிர் காப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்றும் எனவே பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முதல்வர் கடிதம் மூலமாக பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

 

Exit mobile version