காங்கோவில், உபயோகமற்ற அட்டை பெட்டிகளின் மூலம் கால்பந்து மைதானத்தை உருவாக்கும் சிறுவனின் ஆர்வம் அந்நாட்டு மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோ நாட்டில் உள்ள கின்ஷாசாவைச் சேர்ந்த 14 வயது மாணவனான ஜோட்ஜோ கால்பந்து மைதானம் போன்ற கட்டட மாதிரிகளை அட்டைபெட்டிகளின் மூலம் உருவாக்கி பலரது பாராட்டை பெற்றுளான். வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் அந்நாட்டில் ஆர்வத்துடன் இது போன்ற கட்டிட மாதிரிகளை அச்சிறுவன் ஆர்வத்துடன் உருவாக்குவது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து விளையாடுவதில் ஆர்வமில்லாத ஜோட்ஜொ அப்பகுதியில் வளரும் கட்டிட கலைஞராக பெயரெடுத்துள்ளான். இது போன்ற பிரபலமான கட்டிடங்களை அட்டை பெட்டிகள் மூலம் ஜோட்ஜொ வடிவமைத்துள்ளான். இந்த சிறுவனது படைப்புகளுக்கு பெரும் பாராட்டு கிடைத்துள்ள நிலையில், எதிர்காலத்தில் சிறந்த கட்டிட கலைஞராக வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளான்.