கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் காட்டு யானைகள் வருவதை தடுக்க தேனி வளர்ப்பு பெட்டிகளை வழங்கிய வேளாண்துறையினருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிக்கு உட்பட்ட சானமாவு, காமன்தொட்டி, நாயக்கன்பள்ளி, கோபுசந்திரம் போன்ற வனப்பகுதிகளை ஒட்டி கிராமங்களில் ஏராளமான யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் நிலப்பகுதியில் யானைகள் நுழைவதை தடுக்கவேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனிடையே தேனீக்களின் ரீங்கார ஒலிக்கு யானைகள் வராது என்பதால்,தேனீ வளர்ப்பு கருவிகள் வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மக்களுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகள் தரப்பட்டன. அதைப்பெற்றுக்கொண்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.