விருதுநகர் மாவட்டத்தில், காவல் நிலையம் முன்பாக டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டிக் டாக் செயலி மூலம் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோர் ஆபாசமாகவும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல் நிலையம் முன்பு சந்திரன் என்ற வாலிபர் டிக் டாக் ஆப் மூலம் நடித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து சந்திரனை கைது செய்த வன்னியம்பட்டி காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.