தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி மொத்தம் 10 இடங்கள் அதில் 8 இடங்களை அதிமுக கைப்பற்றி வெற்றியை நிலைநாட்டி உள்ளது.அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக 2 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.
அதேபோல் தேனியில் ஒன்றிய கவுன்சிலர் பதவி மொத்தம் 98 இடங்கள் .அதில் 49 இடங்களை அதிமுக கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.எதிர்த்து போட்டியிட திமுக 40 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
தேனியில் அதிமுகவை அசைக்க முடியாது என்பதை உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளது. இந்த வெற்றியை அப்பகுதி அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.