தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறவுள்ளதால் பூங்காவில் உள்ள 41 புள்ளி மான்களை வனப்பகுதிக்குள் விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தஞ்சையில் உள்ள நந்தவன பூங்காவில் ஏராளமான வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவிற்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில் 8 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பூங்கா பாதுகாப்பு பணியின் காரணமாக, பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பதால், வனவிலங்குகளுக்கு அதிர்வலை ஏற்படுத்தும். எனவே இதன் காரணமாக தற்போது பராமரிக்கப்பட்டு வரும் 41 புள்ளி மான்கள் இங்குள்ள கோடியக்கரை வனப்பகுதிக்குள் விடப்பட உள்ளது.