’தளபதி 64’படத்தில் சிக்கிய புது அப்டேட் இதான்…

தளபதி 64 படத்தில் விஜய்யின் நண்பரான ஸ்ரீமன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதை தொடர்ந்து, தளபதி 64 படத்தின் வேலைகளும் தொடங்கிவிட்டது.இப்படத்தை மாநகரம், கைதி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு ஆண்டனி வர்கீஸ் நடிக்கவுள்ளனர். மேலும் படம் குறித்த அப்டேட்களை நாளுக்கு நாள் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் விஜயின் நண்பர்கள் அவருடன் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகிவுள்ளது.நடிகர் ஸ்ரீமன் தளபதி 64 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’எனக்கு தளபதி 64 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் எனது நண்பன் தளபதிக்கு நன்றி.இது ஒரு friends reunion படம் என கூறி விஜயுடன் ஸ்ரீமன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்..

 

Exit mobile version