90’s kids favourite சக்திமான் படமாகிறது!

இன்றைய நவீன யுக இரண்டாயிரம் குழவிகளுக்கு (2k kids) ஸ்பைடர்மேன், சூப்பர் மேன், பேட் மேன் என்று சொல்வதற்கு பல சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். ஆனால் தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு ஒரே ஒரு சூப்பர் ஹீரோதான். அவர்தான் சக்திமான். தொலைக்காட்சியில் தொடராக வெளிவந்த சக்திமான் நிகழ்ச்சியானது தற்போது திரைப்படமாக உருவெடுக்கப் போகிறது என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சக்திமான் தொடர் ரூ.200 கோடி முதல் ரூ.300கோடி வரையிலான பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என அந்தத் தொடரில் சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகேஷ் கண்ணா அளித்த பேட்டி ஒன்றில்,
“சக்திமான் தொடர் படமாக உருவாக உள்ளதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.
ரூ.200-300 கோடி பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்தில் நான் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. மேலும் படக்குழுவினர் எந்த ஒப்பீடும் வேண்டாம் என்றதால் சிறப்புத் தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படும். மேலும், படத்தின் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுடப குழுவின் பெயர்களும் விரைவில் வெளியாகும். படம் வேறொரு தரத்தில் இருக்கும்” என்றார்.

Exit mobile version