தெலங்கானாவில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானாவில் அண்மையில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததால், பல்வேறு இடங்களில் சுமார் 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமான அம்மாநில அரசை கண்டித்து தெலுங்கு தேதம், காங்கிரஸ், மற்றும் இடதுசாரிகள் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரான ஹனுமந்த ராவ் மற்றும் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான நாகேஷ் முடிராஜ் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கைகலப்பாக மாறியதால் மேடையில் இருந்தவர்கள் அவர்களை தடுத்தனர். இந்த சம்பவம் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.