தமிழில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி . ‘உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா, இல்லை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா… என்ற வரிகள் அவருக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது.அந்தப் படத்தில் டாப்சிக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான் போன்ற தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்தார்.
பின்பு ஹிந்தியில் பிங்க் மற்றும் பேட்ல திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் டாப்ஸி கலந்து கொண்டு உரையாடினார். அப்போது பலர் அவரிடம் கேள்விகளை எழுப்பினர் . அதற்கு டாப்சியும் ஆங்கிலத்தில் பதில் கூறிக் கொண்டிருந்தார். அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒருவர் நீங்கள் இந்தி படங்களில் நடிக்கிறீர்கள், அதனால் ஹிந்தியில் தான் பேச வேண்டும் என்று கூறினார்.
உடனே கூட்டத்தை பார்த்து இங்கிருக்கும் அனைவருக்கும் இந்தி தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார் பெரும்பாலானோர் தெரியாது என்று கூறியதால் ஆங்கிலத்தில் பேச்சைத் தொடர்ந்தார். ஆனால் தொடர்ந்து அந்த நபர் நீங்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.அதற்கு பதிலளித்த டாப்ஸி ‘நான் தென்னிந்திய திரைப்படங்களிலும் தான் நடிக்கிறேன்,அப்படி என்றால் தமிழில் பேசவா என்று கேட்டார். அவரின் கேள்விக்கு அரங்கமே கைதட்டியது.
இதனை அடுத்து தென்னிந்திய சினிமா பற்றி பேசிய டாப்ஸி , எனக்கு நடிப்பு என்றால் என்ன? கேமரா என்றால் என்ன? என்பதை தென்னிந்திய சினிமா தான் கற்றுக் கொடுத்தது.எனவே தென்னிந்திய சினிமாவை நான் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.ஹிந்தியில் பேச சொன்னவருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“I am also an actress in the Tamil and Telugu industries. Shall I speak in Tamil to you?”
Watch @taapsee shuts down a man who asks her to speak in Hindi at 50th IFFI pic.twitter.com/QJuDI0DaTi— Suvarna Haridas (@Suvarna_haridas) November 24, 2019