சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆத்தூர் நரசிங்கபுரம் புறவழி சாலையில் திருவண்ணாமலையிலிருந்து பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி நிலை தடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியில் திடீரென ஏற்பட்ட தீயை, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் அணைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.