தொடரும் ரயில் விபத்துகள்…!! தெலுங்கானாவில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸில் பயங்கர தீ விபத்து!

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் விபத்துகள் என்பது பழகிவிட்ட ஒன்றாக உள்ளது. முந்தைய காலங்களில் சாலை விபத்துகள் என்பது ஒவ்வொரு நாளும் நடந்துக் கொண்டே இருந்தது என்று சொல்லலாம்.  குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் அதிகரித்து உள்ளது. சாலை விபத்துகள் மட்டும் அல்லாமல் இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ரயில் விபத்துகளும் நடந்துகொண்டே உள்ளது. இதற்கு உதாரணமாக கடந்த ஜுன் மாதம் நம் இந்தியாவையே  உலுக்கிய கோர விபத்தான ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.  ஒடிஷாவின் பாலாசோர் அருகே 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 290 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து ரயில் விபத்துகள் என்பது சிறிய அளவில் ரயில் தரம் புரண்டது, சரக்கு ரயில்கள் மோதி விபத்து  போன்ற ரயில் விபத்துகள்  நடந்து கொண்டே உள்ளது. இன்னும் ஒடிசா ரயில் விபத்தில் இருந்தே மீளாத நிலையில் அடுத்து ஒரு விபத்து சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

 

ஹைதராபாத்:

தெலுங்கானாவில் ஃபலுக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் மேற்க்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கி ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வந்துகொண்டிருந்தது. இந்த ரயில்காலை 10.30 மணியளவில் தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் பகிடிபல்லி – பொம்மைய்யபல்லி இடையே வரும்போது எஸ்-4, எஸ்-5 ஆகிய இருபெட்டிகளுக்கு இடையே இருந்து புகையாக வருவதை கவனித்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதற்கிடையே தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் வேகமாக வெகமாக பரவத் தொடங்கியது.  இதனால் இந்த ரயிலில் இருந்து பயணிகள் வேக வேகமாக  வெளியேறினர். இருந்தும் இந்நிலையில் தீயானது ஆறு பெட்டிகளில் மிக வேகமாக பரவியது. இதனை பார்த்த  ரயில்வே ஊழியர்கள் அந்த பெட்டிகளை துரிதமாக கழற்றினர். இந்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீயானது 5 பெட்டிகள் முற்றிலுமாக பரவி கருகிவிட்டது .  அதில் ஒரே ஒரு பெட்டி மட்டும் பாதியளவே சேதம் அடைந்தது. பிறகு பாதி  ரயில் பெட்டிகளுடன் ரயில்கள்  செகந்திராபாத் புறப்பட்டு சென்றது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென் மத்திய ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் பயணி ஒருவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு, அதன் அருகில் நின்றுகொண்டு சிகெரட் பிடித்துக்கொண்டு இருந்தார் அந்நேரத்தி  திடீரென சார்ஜர் பிளக் வழியாக புகை வந்தது எனவும் இதான் மூலமாக பெட்டிகள் முலுவதும் தீ பரவியதாகவும் தெரிவித்தார். ஆனால் இது ஒரு புறம் இருக்க சமீபத்திய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து போல் டெல்லி – ஹைதராபாத் இடையே மீண்டும் ஒரு விபத்து விரைவில் நடக்கும் என செகந்திராபாத் ரயில்வே அலுவலகத்திற்க்கு மர்ம கடிதம் ஒன்றூ வந்ததை அடுத்து இத தீ விபத்தானது யாரோ ஒருவரின் சதி செயலாள் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர் போலிசார்.

 

 

 

Exit mobile version