ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!

இந்தியாவில் இந்தாண்டு உலகக்கோப்பை போட்டியானது நடைபெற உள்ளது. அதற்கு முதற்கட்டமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஆசியக் கோப்பை

1984 ஆம் ஆண்டு இருந்து இந்த ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இந்தப் போட்டியானது நடைபெறும். ஆசியா கண்டத்தில் உள்ள முக்கிய நாடுகள் இந்தப் போட்டியில் பங்குகொள்கின்றன. முதலில் ஐம்பது ஓவர் போட்டியாக இருந்த இந்த ஆசியப் போட்டிகள் பின்னர் இரசிகர்களின் மனநிலையைப் பொறுத்து இருபது ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுவிட்டது. அதற்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மோகமும் ஒரு காரணம். இந்தப் போட்டிகளில் இந்திய அணியானது ஏழு முறையும், இலங்கை அணியானது ஆறு முறையும், பாகிஸ்தான் அணியானது இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளது.

கோப்பை வரலாறு

1984, 1988, 1990/91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியானது ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. இதில் 2016 லிருந்து ஐம்பது ஓவராக இருந்த ஆசியக் கோப்பைப் போட்டியானது இருபது ஓவராக மாற்றப்பட்டது. 1986, 1997, 2004, 2008, 2014, 2022 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அணியானது ஆசியக் கோப்பையைத் தன் வசம் வைத்துக்கொண்டது. கொரோனா காரணமாக 2020ல் ஆசியக் கோப்பைப் போட்டியானது நடத்த முடியாமல் போனதால், 2022 ல் நடத்தப்பட்டது. இதில் கோப்பையை வென்ற இலங்கை அணி, நடப்புச் சாம்பியனாக கோலோச்சுகிறது. 2000, 2012 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி கோப்பையை தன் வசம் வைத்திருந்தது. தற்போது இன்று பாகிஸ்தானில் தொடங்க உள்ள இந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் நேபாளம் அணியானது பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கிறது.

இந்திய வீரர்கள் விவரம் :

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஜடேஜா, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரிட் பும்ரா, ப்ரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்

Exit mobile version