ஒடிசா ரயில் விபத்தில் 101 பேர்களின் உடலை அடையாளம் காண முடியவில்லை!

கடந்த வெள்ளிக் கிழமை நாட்டையே உலுக்கிய கோரசம்பவமான கோரமண்டல் ரயில் விபத்தானது ஒடிசாவில் நிகழ்ந்தது. இதில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயத்தினை அடைந்துள்ளனர். தற்போது இறந்தவர்களின் உடலானது பாலசோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், உறவினர்களிடம் இறந்தவர்களின் உடலை ஒப்படைக்கும் பணியானது நடைபெற்று வந்தது.

இறந்தவர்களில் சிலர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். சிலருக்கு முகம் சிதைந்துள்ளது. ஒரு சிலருக்கு கை, கால்களை காணவில்லை. இதனால் உறவினர்களுக்கு தங்களின் நெருங்கியவர்களின் உடலை கண்டுபிடிக்க சிரமமாக இருந்து வருகிறது. அதனையொட்டி தற்போது 101 பேர்களின் உடலை அடையாளம் காண முடியாமல் திணறி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் அங்கு திரண்டு வந்து உடல்களைத் தேடி வருகின்றனர். விபத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை புகைப்படங்களாக எடுத்து அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு விபத்தில் சிதைந்து போயிருப்பதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே புகைப்படங்களை வைத்து அடையாளம் காண்பதில் உறவினர்கள் திணறி வருகின்றனர்.

Exit mobile version