தமிழக அரசின் வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகள்

தமிழக அரசின் வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது, முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர் விருதுகள் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்க வளாகத்தில் நடைபெற்றது.

அறிவியலாளர்களை கெளரவிக்கவும், ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்க வளாகத்தில், தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது, முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அறிவியல் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

Exit mobile version