மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய நபர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் விருது!

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய நபர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட அட்சித் தலைவருக்கு, 10கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version