சிலம்பொலி செல்லப்பனாரின் 92வது பிறந்தநாள் விழா: 11 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் மற்றும் சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பாக, சிலம்பொலி செல்லப்பனாரின் 92வது பிறந்தநாள் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், “காப்பிய கம்பரும் புரட்சிக் கவிஞரும்” என்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது. சிலம்பொலி செல்லப்பனார் பெயரில் பழநி பெரியசாமி, விஜி சந்தோஷம் உட்பட 11 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version