முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்கிறது-முதலமைச்சர் எடப்பாடி பழானிச்சாமி!

தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி, நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் 146 கோடி ரூபாய் செலவில் மருந்துகள் வாங்கப்பட்டதையும் குறிப்பிட்டார். பிரதமர், மாவட்ட ஆட்சியர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்டோருடன் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம் போர்க்கால அடிப்படையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்

 

Exit mobile version