வறுமை ஒழிப்பில் சாதனை படைத்த தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலங்களின் வளர்ச்சி இலக்கு குறியீட்டை தயாரித்துள்ளது. இதில் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஏழ்மையை குறைப்பதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், வறுமை ஒழிப்பில் சாதனை படைத்ததாக தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமரின் கிராம சாலை திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.