9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 39 ஒன்றியங்கள் எவை என்பதை தற்போது காணலாம்…
செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய ஒன்றியங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஒன்றியங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. (( FF CARD OUT ))