காற்றாலை, சூரிய மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

தமிழகம் விரைவில் பொன்விளையும் பூமியாக மாற்றம் பெறும் என டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் கூறினார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய டி.வி.ஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தை தொலைநோக்குடன் வழிநடத்தி செல்வதாக புகழாரம் சூட்டினார். எளிதில் அணுக கூடிய துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாக தெரிவித்தார்.

காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக கூறிய அவர், தமிழகம் விரைவில் பொன்விளையும் பூமியாக மாற்றம் பெறும் என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version