தமிழகம் இரண்டாம் வெண்மை புரட்சியை நோக்கி செல்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகம் இரண்டாம் வெண்மை புரட்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்காவில் உள்ள சைடெக் நிறுவனத்தின் செயல்பாடுகளை அறியவும், கால்நடைகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு, கால்நடைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

 

Exit mobile version