இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு – முதலமைச்சர்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலளார் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன எனவும் கூறினார். ஐசியு வசதி கொண்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 962 படுக்கைகள் மற்றும் 2 ஆயிரத்து 882 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version