பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சத்திரபட்டியில் அம்மா நலத்திட்ட உதவி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதியோர் உதவி தொகை, உழவர் பாதுகாப்பு அட்டை, பட்டா தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தீபாவளி முடிந்த பிறகு சிவகாசியில் 30 நாட்களுக்கு மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருப்பதால் தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாக கூறினார்.
இந்த சூழலில் பட்டாசு தொழிலை மீட்டெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் மூலம் தமிழக அரசு தீர்வு காணும் என்றார்.