கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பல ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நெற்பயிர், வாழை, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் பெரும் சேதமடைந்தன. மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.