இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பால் , ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் கூட்டமாக பயணித்திருப்பதை பார்த்திருப்போம், இதற்கு அடுத்த கட்டமாக ஒரு ஆட்டோவில் 24 பேர் சென்றது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு ஆட்டோவில் மூச்சு விடமுடியாத அளவிற்கு பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர். இதனை கண்ட போலீஸ் கமிஷனர் ஒருவர், ஆட்டோவிலிருந்து பயணிகளை இறங்க சொல்லி, வீடியோ எடுத்துள்ளார். இந்நிகழ்ச்சி ”யாரடி நீ மோகினி ” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில், துணிக்கடைக்கு ஒரு குடும்பமே சுமோவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக இறங்குவதை போல் ஒரு ஆட்டோவிலிருந்து 24 பேர் இறங்குவதை கண்டு கமிஷனர் அதிர்ந்து போனார்.
இதனை தொடர்ந்து ஆட்டோவில் வந்த 24 பேரையும் family photo -க்கு போஸ் கொடுப்பத்தை போல் நிற்க சொல்லி போலீசார் கேட்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பணத்தை மிச்சம் செய்வதாக நினைத்து, இவர்கள் செய்யும் பயணம் பாதுகாப்பற்றது.
People should take care of their own safety. They shouldn’t board in overcrowded passenger autos unmindful of their safety pic.twitter.com/Aul2l2LM7C
— CP KARIMNAGAR (@cpkarimnagar) August 11, 2019