8-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்த ஆய்வு மாணவர்கள்

திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்லை ஆய்வு மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திருப்பத்தூரில் தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரியனேரி கிராமத்தில் ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்’ இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

11 அடி நீலமும் 3 அடி அகலமும் கொண்ட கல்லில், ஆண் ஒருவன் இடது கையினை மார்பிலும், வலது கையினை மேல்நோக்கி உயர்த்தியவாறும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல் கி.பி. 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என ஆய்வு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version