திமுக அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்த போதிலும் கல்வித்துறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நீட்டி முழக்கும் அரசு அதை வெறும் கோஷமாகத்தான் செய்துவருகிறார்கள். இல்லம் தேடி கல்வி என்று ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் சொன்னார்கள் ஆனால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் அதல பாதாளத்தில் இருக்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கல்வி சார்ந்த கள நிலவரம் என்ற ஆய்வு அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 59 சதவீதம் பேருக்கு எழுத்துக்களை கூட படிக்க தெரியவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கணித பாடத்தில் வரும் சாதாரண கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்ற கணக்குகளை போடத்தெரியவில்லை. ஆக மொத்தத்தில் மாணவர்களின் கற்றல் திறன் மிகமோசமாக இருப்பதாக அந்த தகவல் எச்சரிக்கையோடு தகவலை வெளியிட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக செய்ய வேண்டிய பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி முறையாக மேற்கொண்டிருந்தால்,
மாணவர்களின் கல்வி தரம் மோசமாகியிருக்காது என கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனது நண்பரான வாரிசு அமைச்சர் உதயநிதிக்கு துதி பாடுவதிலும், கல்லா கட்டவும் தான் நேரம் இருக்கிறது கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.