Phd படித்தவர்கள் கல்லூரிகளில் இனி உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற சிக்கல்! யுஜிசி அதிரடி!

தமிழகத்தைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரிகளில் உதவிப் பேராசியர்கள் நியமனமானது தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டில் உதவிப் பேராசிரியர்களின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது 2,331 என்ற வகையில் இருந்தது. அப்போது இந்தக் காலிப் பணியிடங்களுக்கு 40,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். சரி இது ஒருபுறம் இருக்க, உதவிப் பேராசிரியர்களுக்கு தகுதியாக நெட், செட், ஸ்லெட் ஆகியத் தேர்வுகள் நடைமுறையில் இருந்தன. மேலும் பிஎச்டி முடித்திருந்தால் அதனையும் உதவிப் பேராசியர் பணிக்கு தகுதியாக கருத முடியும் என்று 2021 ஆம் ஆண்டு சொல்லப்பட்டிருந்தது.

யுஜிசி விதிகளில் மாற்றம்..!

கல்லூரிகளில் உதவிப் பேராசரியராகப் பணியாற்ற இனி பிஎச்டியை ஒரு தகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று யுஜிசி தற்போது அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்ற NET,SET,SLET தேர்வுகளில் தகுதி பெற்று இருப்பது மட்டுமே கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற பிஹெச்டி முடித்திருந்தால் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பிஎச்டி முடித்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில் விதிகளில் மாற்றம் செய்து NET,SET,SLET உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு பிஹெச்டி படிப்பு முடித்திருந்தால் உதவி பேராசிரியராக பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்ட விதியை மாற்றி தற்பொழுது பிஎச்டி படிப்பை கூடுதல் தகுதியாக சேர்த்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மாநில குழு அறிவித்துள்ளது.

தேர்வர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்..!

கொரோனா காலக்கட்டதில் 40 முதல் 50 வயதைக் கடந்தவர்கள் உதவிப் பேராசிரியர்கள் இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. அவர்களுக்கு தற்போது உள்ள தலைமுறையினரோடு போட்டியிட சில அறிவார்ந்த சிரமங்களும், பின்புலமின்மையும் காரணகர்த்தாவாக போய்விட்டது. மேலும் சில தேர்வர்களின் உள்ளக் குமுறலானது, நாங்கள் எத்தனை நாட்களுக்கு தொடர்ந்து தேர்வு மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கப்போகிறோம். ஆசிரியர் தேர்வு வாரியம் அனைவருக்கும் ஒரே மாதிரியானத் தேர்வினை வைக்க வேண்டும். ஏனென்றால் பாடத்திட்டங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப மாற்றம் அடைகிறது. அதற்கு ஏற்றார்போல அனைத்துத் தேர்வர்களுக்கு சரியான முறையில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக பணிக்காக காத்திருக்கும் தேர்வர்கள் கூறிவருகிறார்கள்.  முதுகலைப் படிப்பு முடித்தவுடன் உதவிப்பேராசிரியர்களுக்கான தேர்வினை வைக்கலாம் போன்ற கோரிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன் எழுந்த வண்ணம் இருந்தது.

ஆனால் தற்போது பல்கலைக்கழக மானியக் குழு எடுத்திருக்கும் இத்தகைய நடவடிக்கை பெரிய அளவில் உதவிப் பேராசிரியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை என்கின்றனர் கல்வியாளர்கள்.

Exit mobile version