தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க ஏதுவாக திமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு

உயர்நீதிமன்ற விதிகளை மீறி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க ஏதுவாக திமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா காலத்தில் கட்டணம் செலுத்தக்கோரி பெற்றோரை வற்புறுத்தக்கூடாது என கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அப்போதைய அதிமுக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில், 40 சதவிகித கட்டணத்தை முதல் தவணையாகவும், சில மாதங்கள் கழித்து 35 சதவிகித கட்டணத்தை 2ம் தவணையாகவும் வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் தற்போதைய திமுக அரசு 75 சதவிகித கட்டணத்தை ஒரே தவணையாக பெறலாம் என வாய்மொழியாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை தகவல் மையத்திற்கு அழைத்து விளக்கம் கேட்டால், முதல் தவணை 75 சதவிகிதமும், இரண்டாம் தவணை எஞ்சிய 25 சதவிகிதமும் செலுத்த வேண்டுமென பதிலளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version