கூலி உயர்வு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கலில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், விசைத்தறி தொழிலில் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடி ஏற்படாததால் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க கட்டிடத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.