மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 14 அணிகள் பங்கேற்பு

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி அணிகள் வெற்றி பெற்றன .தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த திட்டங்குளத்தில் பாரதி ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றுள்ளன. 2வது நாள் முதல் ஆட்டத்தில் அருப்புக்கோட்டை ஹாக்கி அணியும், இலுப்பையூரணி ஹாக்கி அணியும் மோதியது. இதில் அருப்புக்கோட்டை ஹாக்கி 3 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணியும், ராஜீவ் காந்தி ஹாக்கி அணியும் மோதின. இதில் திட்டங்குளம் அணி 7க்கு 5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இதேபோல பாண்டவர்மங்கலம்,தூத்துக்குடி அணிகளும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.

Exit mobile version